கடுவெல, கொழும்பு, கொலன்னாவை மற்றும் களனி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல தயக்கம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை துணை அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், குறித்த விடயம் ஒரு தீவிர கவலையாக மாறி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர் மட்டம்
நீர் மட்டம் உயர்ந்தவுடன் படகு மூலம் மக்களை வெளியேற்றுவது மிகவும் கடினமாகவும் ஆபத்தானதாகவும் மாறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் கணிப்புகளின்படி இன்றிரவு மிகக் குறுகிய காலத்திற்குள் நீர் மட்டம் அசாதாரணமாக உயரக்கூடும் எனவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், பொதுமக்களிடமிருந்து உடனடி நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பை அமைச்சர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
