ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 16ஆம் திகதி டில்லிக்குப் பயணம்
மேற்கொள்ளவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்
வெளியாகியுள்ளது.
16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இந்தியாவில் முக்கியத்துவமிக்க சந்திப்புகளில்
ஜனாதிபதி ஈடுபடவுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
இந்தியப் பிரதமர்
இந்தியப் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் ஜனாதிபதி பேச்சு
நடத்தவுள்ளார் எனவும், வர்த்தக சமூகத்தினருடனும் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது
எனவும் அறியமுடிகின்றது.
மேலும், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்
சந்திரசேகர் ஆகியோரும் ஜனாதிபதியுடன் டில்லி செல்லவுள்ளனர். மீனவர் பிரச்சினை
சம்பந்தமாகவும் சந்திப்புக்களில் கலந்துரையாடப்படவுள்ளது.