Home உலகம் பாகிஸ்தானுக்கு ஆதரவான காலிஸ்தான் : கேள்விக்குறியாகும் இந்தியாவின் பாதுகாப்பு

பாகிஸ்தானுக்கு ஆதரவான காலிஸ்தான் : கேள்விக்குறியாகும் இந்தியாவின் பாதுகாப்பு

0

பாகிஸ்தானை (Pakistan) தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் கிழை அமைப்பான, ‘ரெசிஸ்டன்ஸ் ப்ரன்ட் (டி.ஆர்.எப்), முதலில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு தானாகவே முன்வந்து பொறுப்பேற்றது.

ஜம்மு – காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காமில் கடந்த மாதம் 22ஆம் திகதி நடாத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு (Pakistan) எதிரான நடவடிக்கைகளில் இந்திய மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

மேலும், இந்திய மக்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளின் பின்னணியில் இருப்பவர்களை விடமாட்டோம் என்றும், இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்றும் இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனால், எந்த நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவு கும்பல்கள் (Khalistan-supporting groups) இடையேயான எந்தவொரு கூட்டணி அல்லது ஒத்துழைப்பு பற்றிய தகவல்கள் இந்திய உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஊடகங்களில் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. 

சில நிகழ்வுகளில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ (ISI) போன்ற அமைப்புகள், இந்தியாவை கலங்கடிக்க மற்றும் பஞ்சாபில் பிரிக்கப்போவதாக உள்ள காலிஸ்தான் இயக்கங்களை ஆதரிக்கின்றன என்று கூறப்படுகிறது.

* படையெடுத்தல் மற்றும் பயிற்சி – சில காலிஸ்தான் ஆதரவு உறுப்பினர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.

* நிதி மற்றும் ஆயுத ஆதரவு – பாகிஸ்தானில் இருந்து வந்த நிதி மற்றும் ஆயுதங்கள், இந்தியாவிற்குள் தந்திரமாக வந்ததாக பாதுகாப்பு அமைப்புகள் கண்டறிந்துள்ளன.

* தகவல் போக்குவரத்து – இணையம் மற்றும் குறுஞ்செய்தி பயன்பாடுகள் வழியாக ஒத்துழைப்பு.

இது இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் சவாலாக உள்ளது. ஆனால், இந்தியா தொடர்ந்து தன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகள் மூலம் இந்த சந்தேகங்கள் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகளை கண்காணித்து வருகிறது.

இது தொடர்பான சமீபத்திய சம்பவங்களைப் பற்றிய விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய “அதிர்வு” 

https://www.youtube.com/embed/fzJNOseT6CU

NO COMMENTS

Exit mobile version