Home சினிமா அச்சு அசல் எம்ஜிஆர் போலவே இருக்கும் நபர்.. வைரலாகும் வீடியோ

அச்சு அசல் எம்ஜிஆர் போலவே இருக்கும் நபர்.. வைரலாகும் வீடியோ

0

எம்ஜிஆர் 

புரட்சி தலைவர், பொன்மனச்செம்மல், எங்க வீட்டு பிள்ளை என அழைக்கப்பட்டு மக்களால் கொண்டாடப்பட்டவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமசந்திரன். சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் தனக்கென்று தனி இடத்தை சம்பாதித்தார்.

நாளை நமதே, நம் நாடு, அன்பே வா, அடிமை பெண் என பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். அதே போல் அரசியலில், தோல்வியே காணாத முதலமைச்சராக தமிழகத்தை ஆண்டார். இன்றளவும் தமிழ்நாட்டில் ஒரு மனிதரை தெய்வமாக பார்க்கிறார்கள் என்றால், அது இவரை மட்டும் தான்.

5 நாட்களில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இப்படி பல பெருமைக்கு சொந்தக்காரரான எம்ஜிஆர் 1987ம் ஆண்டு மறைந்தார். உலகில் ஒருவரை போல் 7 பேர் இருப்பார்கள் என பலரும் கூறி நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஒருவரை போலவே அச்சு அசல் அப்படியே மற்றொரு இருப்பது மிகவும் ஆச்சர்யமாக இருக்கும்.

எம்ஜிஆர் போலவே இருக்கும் நபர்

இந்த நிலையில், எம்ஜிஆர் அவர்களை அப்படியே உரித்து வைத்திருக்கும் நபர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும், அடிமை பெண் படத்தில் வரும் எம்ஜிஆர் போலவே இவர் இருக்கிறார் என கூறி வருகிறார்கள்.

சிலர் சந்தேகத்துடன் இது AI என கேள்வி எழுப்பினாலும், இது AI இல்லை என தெரிந்தபின் ஆச்சர்யமைடைந்துள்ளனர். இதோ அந்த வீடியோ.. 

NO COMMENTS

Exit mobile version