Home இலங்கை அரசியல் அம்பாறையில் மந்த நிலையில் வாக்களிப்பு: இதுவரை பதிவான வாக்கு வீதம்

அம்பாறையில் மந்த நிலையில் வாக்களிப்பு: இதுவரை பதிவான வாக்கு வீதம்

0

அம்பாறை மாவட்டத்தில் தற்போது வரை 24.5 வீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

2025 ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்ற தேர்தல் அம்பாறை மாவட்டத்தில்
சுமூகமாகவும் மந்த கதியிலும் இடம்பெற்று வருகின்றது.

வாக்களிப்பு

குறிப்பாக திகாமடுல்ல
தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை ,பொத்துவில் , சம்மாந்துறை ஆகிய தேர்தல்
தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிப்பில்
ஈடுபட்டு வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக 19
உள்ளுராட்சி மன்றங்களுக்காக 4,78000 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி
பெற்றுள்ளனர்.

இதேவேளை தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு
நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதனை காணக்கூடியதாக உள்ளதுடன் அசம்பாவிதங்களை
தவிர்க்கும் நோக்குடன் விசேட அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version