Home உலகம் கனடாவில் இந்து கோவிலுக்கு சென்றவர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்!

கனடாவில் இந்து கோவிலுக்கு சென்றவர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்!

0

கனடாவிலுள்ள(Canada) இந்து கோவில் ஒன்றுக்கு சென்ற பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடாவின் பிராம்டன் நகரில் அமைந்துள்ள இந்து மகா சபை கோவிலுக்கு சென்றவர்கள் மீதே காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதல் சம்பவம்

இதன்போது, தொண்டு நிறுவனம் ஒன்று அந்த தாக்குதலைக் காட்டும் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த காணொளியில், கோவிலுக்குச் சென்ற பெண்கள், குழந்தைகள் உட்பட ஏனைய பொமக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, கனடா பிரதமர் ட்ரூடோ உட்பட கனேடிய அரசியல்வாதிகள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துவருகிறனர்.

Source: https://ibctamil.com/article/khalistanis-attack-on-canadian-hindu-temple-1730715666

NO COMMENTS

Exit mobile version