Home சினிமா தீபிகா படுகோனே, பிரியங்காவை அடுத்து அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை கியாரா அத்வானி.. Toxic படத்திற்காக...

தீபிகா படுகோனே, பிரியங்காவை அடுத்து அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை கியாரா அத்வானி.. Toxic படத்திற்காக இத்தனை கோடியா?

0

கியாரா அத்வானி

பாலிவுட் சினிமாவில் கொண்டாடப்படும் டாப் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை கியாரா அத்வானி.

இவர் 2014ம் ஆண்டு Fugly என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டார்.

பின் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு என படங்கள் நடித்து வந்தார். கடைசியாக கியாரா அத்வானி நடிப்பில் தெலுங்கில் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் படம் வெளியாகி இருந்தது.

சம்பளம்

கியாரா அத்வானி, பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை கடந்த 2023ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார், தற்போது இருவரும் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.

தற்போது கியாரா அத்வானி கன்னடத்தில் உருவாகும் Toxic படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக அவர் ரூ. 15 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளாராம்.

பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே மற்றும் பிரியங்கா சோப்ராவிற்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளார். 

NO COMMENTS

Exit mobile version