இலங்கையில் சிறுவன் ஒருவர், பிரதான வீதியில் கார் ஒன்றை செலுத்திச் செல்லும் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த சம்பவம், எல்ல பிரதேசம் பதுளை வீதியில் நடந்துள்ளது.
இதனையடுத்து, சிறுவனை கார் ஓட்ட அனுமதித்தவர்களை பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தவறு
சிலர், சிறுவனின் கார் ஓட்டும் திறன் சிறப்பாக இருப்பதாகவும் பாராட்டி வருகின்றனர்.
எவ்வாறாயினும், இவ்வாறான ஆபத்தான விடயங்களை செய்ய சிறுவர்களை அனுமதிப்பது அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தவறாகும்.
இது தொடர்பான காணொளியைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
