கிளிநொச்சி – பூநகரி கௌதாரி முனையில் மணல் அகழ்வதற்கான அனுமதி இல்லாது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைச்சர் சந்திரசேகரனால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
மேலும் குறிக்கிட்ட அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசாவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையே கருத்து மோதல்களும் ஏற்பட்டிருந்தது.
ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்(Ramalingam Chandrasekar), வடமாகாண ஆளுநர் வேதநாயகன் இணைத் தலைமையில் இன்று(26.12.2024) குறித்த கூட்டம் ஆரம்பமானது.
இராணுவத்தினர் வசமுள்ள காணிகள்
இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், இராமநாதன் அர்ச்சுனா, ரஜீவன், இளங்குமரன், பவானந்தராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன், மற்றும் திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது இராணுவத்தினர் வசமுள்ள காணிகள், மாவட்டத்தில் அதிகரித்துள்ள மதுபான சாலைகள், சட்டவிரோத மணல் அகழ்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.