Home இலங்கை யுனெஸ்கோவின் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள கித்துல் பதனிடல் – வெட்டுதல்

யுனெஸ்கோவின் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள கித்துல் பதனிடல் – வெட்டுதல்

0

இலங்கையின் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியமான கித்துல் பதனிடல் மற்றும்
வெட்டுதல் என்பன யுனெஸ்கோவின் அவசரப் பாதுகாப்பிற்கான அருவமான கலாசார
பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கிராமப்புற சமூகங்களில் ஆழமாக வேரூன்றியுள்ள இந்த நடைமுறையானது,
காடுகள் மற்றும் வீட்டுத் தோட்டங்களில் காணப்படும் கித்துல் மரத்தில் இருந்து
பானி சேகரிப்பதாகும்.

செயன்முறை.. 

இந்தச் செயல்முறைக்கு அதிக திறமையும், கவனிப்பும் தேவை.

பதனிடுபவர்கள் ஏணிகளைப் பயன்படுத்தி உயரமான மரத்தில் ஏறி, பூக்கும் தண்டினை
கொடிகள் மூலம் கட்டி, பதனிடும் கத்தியைப் பயன்படுத்தி துல்லியமான வெட்டுக்களை
உருவாக்குகிறார்கள்.

தினமும் சேகரிக்கப்படும் இந்த பானி வடிகட்டப்பட்டு, பல மணி நேரம் கொதிக்க
வைக்கப்பட்டு கித்துல் பாணி தயாரிக்கப்படுகிறது.

இந்த பானியானது வெல்லம், வினிகர் மற்றும் பாரம்பரிய மதுபானங்களைத்
தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது அல்லது உட்கொள்ளப்படுகிறது.

நவீனமயமாக்கல், காடழிப்பு, மற்றும் இந்தத் திறன்கள் தலைமுறை தலைமுறையாகக்
கடத்தப்படுவது குறைதல் போன்ற காரணங்களால் இந்தத் தேசியத் தொழில்நுட்பம்
அழியும் அபாயத்தை எதிர்கொள்வதால், இதனைக் பாதுகாக்க வேண்டிய அவசரத் தேவையை
யுனெஸ்கோவின் இந்த அங்கீகாரம் கோடிட்டுக் காட்டுகிறது. 

NO COMMENTS

Exit mobile version