Home இலங்கை அரசியல் ரணில் தலைமையில் அரசுக்கு எதிராக வழக்கு: அநுரவுக்கு எதிராக பின்னப்படும் சூழ்ச்சி வலை

ரணில் தலைமையில் அரசுக்கு எதிராக வழக்கு: அநுரவுக்கு எதிராக பின்னப்படும் சூழ்ச்சி வலை

0

நாட்டில் ஆட்சியை கைப்பற்றுவதற்கான போட்டி என்பது உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.

தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வசமிருந்து நாட்டை கைப்பற்ற எதிர்க்கட்சிகள் பலதரப்பட்ட நடவடிக்கைகளை மறைமுகமாகவும் ஏன் வெளிப்படையாகவும் கூட மேற்கொண்டு வருகின்றன.

இதில் மிகவும் முக்கியமாக நோக்கப்பட்ட விடயம்தான் நாட்டில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட நூற்றுக்கணக்கான உயிரிழப்பு மற்றும் பல கோடி ரூபா சொத்து சேதத்தை முன்கூட்டியே முகாமைத்துவம் செய்து நிர்வகிக்காமையானது மனித சமூகத்துக்கு மேற்கொள்ளப்பட்ட அநீதி என்பதால் அரசாங்கத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்காக எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல்வேறு கட்சிகள் தயாராகி வருவதாக வெளியான தகவல்.

இதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமைத்துவம் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நாமல் ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பல்வேறு எதிர்க் கட்சிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தை தங்களுக்கு சாதமாக கொண்டு செல்ல எதிர்கட்சிகள் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது மக்கள் மத்தியில் பாரிய விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.

இவ்வாறு, நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் அரசியல், எதிர்கட்சிகளின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பலதரப்பட்ட நடப்புசார் அரசியல் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் இன்றைய நாட்டு நடப்பு நிகழ்ச்சி, 

https://www.youtube.com/embed/nyuFqlwaLjQ?start=390

NO COMMENTS

Exit mobile version