இலங்கையை பூர்வீகமாக கொண்ட பிரித்தானியாவில் வசிக்கும் ரணில் ஜயவர்தனவுக்கு நைட் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய மன்னர் சார்லஸ் மூலம் இந்த கௌரவப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இனிமேல் அவர் “Sir ரணில் ஜயவர்தன” என அழைக்கப்படுவார்.
நைட் பட்டம்
ரணில் ஜயவர்தன பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் உறுப்பினரும் அரசாங்க அமைச்சரும் ஆவார்.
ஆனால் கடந்த பொதுத் தேர்தலில் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் ஹம்ப்ஷயர் தொகுதியில் அவரால் வெற்றிபெற முடியவில்லை.
எவ்வாறாயினும், ரணில் ஜயவர்தன ஒரு பொது பிரதிநிதியாக இதுவரை ஆற்றிய பங்கை அங்கீகரித்து அவருக்கு நைட் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.