Home இலங்கை அரசியல் கொலன்ன பிரதேச சபையின் வரவுசெலவுத் திட்டம்! இரண்டாவது முறையாகவும் தோல்வி..

கொலன்ன பிரதேச சபையின் வரவுசெலவுத் திட்டம்! இரண்டாவது முறையாகவும் தோல்வி..

0

தேசிய மக்கள் சக்தி (NPP) பெரும்பான்மையை கொண்ட கொலன்ன பிரதேச சபையின் 2026ஆம்
ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்துள்ளது.

நேற்றைய(10) சபைக் கூட்டத்தில் இந்த வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 9
உறுப்பினர்கள் வாக்களித்த அதேவேளை, 10 உறுப்பினர்கள் அதனை எதிர்த்து
வாக்களித்தனர்.

இன்றைய சபை அமர்வு 

இன்றைய சபை அமர்வு ஆரம்பிக்கும்போது, சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில்
ஆசனங்களை மாற்றியமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இது சபையில்
கடுமையான வாக்குவாதங்களுக்கு வழிவகுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் விளைவாக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று போராட்டத்தை நடத்தியது.

கொலன்ன பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 9 உறுப்பினர்கள், சஜித்
தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) 5 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன
பெரமுனவின் (SLPP) 3 உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP)
ஒரு உறுப்பினர் ஆகியோர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version