கொம்பு சீவி
10 வருடங்களுக்கு முன்பே சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் சண்முக பாண்டியன்.
ஆனால் அவரால் இந்தத் துறையில் சரியாக ஜொலிக்க முடியவில்லை, இப்போது 2வது இன்னிங்ஸை தொடங்கியது போல் கொம்பு சீவி படத்தில் நடித்துள்ளார்.
கிராமத்து கதைக்களத்தை மையமாக கொண்டு நடந்த நிஜ சம்பவத்தை மையமாக கொண்டு தயாராகி வெளியாகியுள்ள இப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கதை எப்படியோ ஆனால் இதில் சண்முக பாண்டியன் நடிப்பிற்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்துள்ளது.
புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள கண்ணே கலைமானே சீரியல் நடிகை… எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா?
பாக்ஸ் ஆபிஸ்
கடந்த டிசம்பர் 19ம் தேதி வெளியான இப்படம் முதல் நாளில் ரூ. 40 லட்சம் வசூல் செய்ய, 2வது நாளிலும் நல்ல வசூல் தான்.
மொத்தமாக இரண்டு நாட்களில் படம் ரூ. 90 லட்சம் வசூலித்திருப்பதாக தகவல் வந்துள்ளது.
