கொம்புசீவி
சகாப்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் சண்முக பாண்டியன். இவர், மறைந்த கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் ஆவார்.
இவர் நடிப்பில் இந்த ஆண்டு படைத்தலைவன் படம் வெளிவந்தது. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இதை தொடர்ந்து வெளியாகியுள்ள படம்தான் கொம்புசீவி.
தளபதி விஜய்யின் ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம்
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் பொன்ராம் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த வாரம் திரைக்கு வந்த கொம்புசீவி திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.
வசூல்
இப்படம் நான்கு நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 1.5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
