க்ரித்தி சனோன்
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் க்ரித்தி சனோன். 2014ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த 1: Nenokkadine படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
ஆனால், இவருக்கு பாலிவுட்டில் தான் நல்ல வரவேற்பு கிடைத்தது. தில்வாலே, ஹவுஸ்ஃபுல் 4, Mimi போன்ற பல இந்தி படங்களில் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையானார். தனக்கென்று தனி இடத்தை அங்கு உருவாக்கியுள்ளார்.
நடிகர் லிவிங்ஸ்டன் மகள் நடிகை ஜோவிதாவின் மிரர் செல்ஃபி போட்டோஷூட்..
சமீபத்தில் தனுஷுடன் இணைந்து தேரே இஷ்க் மே என்கிற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
காதல்
இந்த நிலையில், க்ரித்தி சனோன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இதில் “வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் தொடுவதாக காதல் இருக்கிறது. அந்த காதலின் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது. நான் உண்மையிலேயே காதலை நம்புகிறேன். அது வெறும் காதல் மட்டும் அல்ல, எல்லாவற்றுக்குமான அன்பு” என கூறியுள்ளார். காதல் குறித்து க்ரித்தி சனோன் பேசியது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
