Home இலங்கை சமூகம் குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் அதிரடி கைது!

குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் அதிரடி கைது!

0

திருகோணமலை – குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது, இலஞ்ச ஆணை குழுவினால் இன்று(31) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

5 லட்சம் ரூபா பணத்தை லஞ்சமாக பெற முனைந்தபோது இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.

 

விசாரணை

கைது செய்யப்பட்ட இவர், தற்போது திருகோணமலை – நிலாவெளி காவல்நிலையத்தில்
ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version