Home சினிமா செம ஹிட்டடித்த குடும்பஸ்தன் திரைப்படத்தின் புதிய OTT ரிலீஸ் தேதி… எப்போது பாருங்க

செம ஹிட்டடித்த குடும்பஸ்தன் திரைப்படத்தின் புதிய OTT ரிலீஸ் தேதி… எப்போது பாருங்க

0

குடும்பஸ்தன்

ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் கடந்த ஜனவரி 24ம் தேதி வெளியான திரைப்படம் குடும்பஸ்தன்.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நாயகனின் வாழ்க்கையை நகைச்சுவையாக கொண்டு செல்லப்பட்ட ஒரு படம். படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதில் மணிகண்டனுடன் சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைஷாக் இசையமைத்துள்ளார்.

ஓடிடி ரிலீஸ்

ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப் பெற்றுவிட்டால் உடனே அடுத்து ஓடிடி தளப்பக்கம் ரிலீஸ் ஆகிவிடும். அப்படி தான் குடும்பஸ்தன் படம் பிப்ரவரி மாதமே ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது.

ஆனால் தற்போது படத்தின் புதிய ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வந்துள்ளது.

வரும் மார்ச் 7ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version