Courtesy: H A Roshan
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழு பிரதிநிதிகள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்பு இன்று (05.09.2024) மாலை திருகோணமலையில் உள்ள தமிழரசுக் கட்சி மாவட்டப் பணிமனையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பின் போது, ஜனாதிபதித் தேர்தல் நிலவரங்கள் பற்றி ஆராயப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் எதிர்நோக்கும் சவால்கள்
அத்துடன், திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.