Home முக்கியச் செய்திகள் ஓய்வில் இருக்கப்போகும் சிறிலங்கா கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்

ஓய்வில் இருக்கப்போகும் சிறிலங்கா கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்

0

சிறிலங்கா கிரிக்கெட் அணியின் வழமையான ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ்(kusal mendis) ஓய்வில் இருக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான சிறிலங்கா அணியில் குசல் மெண்டிஸ் இடம்பெறமாட்டார் என சிறிலங்கா கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அணி நிர்வாகம் முடிவு

துடுப்பாட்டத்தில் தொடர்ந்து வெற்றி பெறாததால் அவருக்கு ஓய்வு அளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

புதிய தலைமைத்துவத்திற்கு பரிசீலிக்கப்படும் பெயர்

எனினும், வனிந்து ஹசரங்க(wanindu hasaranga) ரி-20 தலைமைப் பதவியிலிருந்து விலகியதையடுத்து, புதிய தலைமைத்துவத்திற்கு பரிசீலிக்கப்படும் பெயர்களில் குசல் மெண்டிஸின் பெயரும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Source: https://ibctamil.com/article/kusal-mendis-out-of-the-team-1720951992?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version