அக்மீமன பகுதியில் வாடகைக்கு பெறப்பட்ட வீட்டில் குஷ் ரக போதைப்பொருளை பயிரிட்டு வந்த பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, குறித்த வீட்டின் இரு அறைகளில் அவர் போதைப்பொருளை பயிரிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு வருகைதரும் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதற்காக அவர் அந்த செடிகளை பயிரிட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த வீடு கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கு சொந்தமானது எனவும், சந்தேகநபர் வீட்டை வாடகைக்கு பெற்று அதற்கான மாத வாடகையாக 1.5 இலட்சம் ரூபாயை செலுத்தி வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி மாவட்ட குற்றப்பிரிவு முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
