Home இலங்கை அரசியல் குட்டிமணியின் மகன் கூறும் இரகசியம்: வெலிக்கடை சிறைச்சாலையில் நடந்தது என்ன..!

குட்டிமணியின் மகன் கூறும் இரகசியம்: வெலிக்கடை சிறைச்சாலையில் நடந்தது என்ன..!

0

பொலிஸாரினால் ஈழ விடுதலைப் போராளிகளான குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் மற்றும் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.

அவர்களின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாத நிலையில், இன்றுவரை அவர்களுக்கான நியாயம் கிடைக்கவில்லை.

இந்தநிலையில், வெலிக்கடை சிறைச்சாலையில் கொல்லப்பட்ட குட்டிமணியின் மகன் யோகச்சந்திரன் மதிவண்ணன் தாங்கள் இந்தஊரை விட்டு வெளியேறிவிட்டதாகவும் அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் பொலிஸாரிடமும், இராணுவத்தினரிடமிருந்து பல பிரச்சினைகள் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

வானொலியில் இலங்கை செய்திகள் கேட்டுக்கொண்டிருந்த போதே இறந்தவர்களின் பெயர் பட்டியலில் தந்தையின் பெயரரையும் கூறுவதை அறிந்துக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தந்தை வீட்டில் இல்லாத போதும் அவரை தேடி வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்யததாகவும் குறிப்பிட்டார்.

எங்கே புதைத்துள்ளார்கள் என்று கூட தெரியாத நிலையில்,தற்போதைய அரசாங்கத்திடமும் கோரிக்கை வைத்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பிலான உண்மைகளை அறிய கீழுள்ள காணொளியை காண்க…  

NO COMMENTS

Exit mobile version