லூசிஃபர் 2: எம்புரான்
கடந்த 2019ம் ஆண்டு மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று லூசிஃபர். பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான இப்படம் உலகளவில் ரூ. 145 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது. இப்படத்திற்கு லூசிஃபர் 2: எம்புரான் என தலைப்பு வைத்துள்ளனர்.
சூப்பர் சிங்கர் பிரகதியின் காதலர் யார் தெரியுமா.. இந்த பிரபலம் தானா, புகைப்படம் இதோ
வருகிற மார்ச் 27ம் தேதி இப்படம் வெளியாகிறது. சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டிரைலர் ரசிகர்களுடைய அமோக வரவேற்பை பெற்றது.
ப்ரீ புக்கிங்
இந்த நிலையில், கடந்த வாரம் இப்படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கிய நிலையில், இதுவரை உலகளவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, உலகளவில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 32 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதுவரை எந்த ஒரு மலையாள படமும் ப்ரீ புக்கிங்கில் செய்யமுடியாத சாதனையை லூசிஃபர் 2: எம்புரான் படம் செய்துள்ளது.
