Home அமெரிக்கா அமெரிக்காவில் நடந்த கொடூர விபத்து.. பலர் படுகாயம்!

அமெரிக்காவில் நடந்த கொடூர விபத்து.. பலர் படுகாயம்!

0

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு இரவு விடுதிக்கு வெளியே மக்கள் கூட்டத்திற்குள் கார் ஒன்று நுழைந்ததில் குறைந்தது 30பேர் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

கிழக்கு ஹாலிவுட்டில் உள்ள சாண்டா மோனிகா பவுல்வர்டில் நடந்த குறித்த விபத்து சம்பவத்தில் படுகாயமடைந்த மூன்று பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், ஐந்து பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் லொஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

துப்பபாக்கிச் சூடு 

அதிகாலையில் ஒரு அடையாளம் காணப்படாத வாகனம், மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்து பலர் மீது மோதியுள்ளது. 

லொஸ் ஏஞ்சல்ஸ் நகர தீயணைப்புத் துறையின் பொதுத் தகவல் அதிகாரி கேப்டன் ஆடம் வான் கெர்பன் கூறுகையில், ஒரு வரிசையில் மக்கள் – பெரும்பான்மையான பெண்கள் – ஒரு இரவு விடுதிக்குள் நுழைய காத்திருந்தபோது, ஒரு வாகனம் அவர்களை மோதியது என குறிப்பிட்டுள்ளார்.

அந்த வாகனம் ஒரு டகோ டிரக் மற்றும் வேலட் ஸ்டாண்டையும் மோதியததாக தெரிவித்த அவர், சம்பவத்தில் காயமடைந்த ஒருவருக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயம் இருப்பதை துணை மருத்துவர்கள் கண்டுபிடித்ததுள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேடும் பணியும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக லொஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version