Home இலங்கை சமூகம் மக்களே வெளியேறுங்கள்.. களனியை அண்டிய பிரதேசத்திற்கு மீண்டும் அனர்த்தம்

மக்களே வெளியேறுங்கள்.. களனியை அண்டிய பிரதேசத்திற்கு மீண்டும் அனர்த்தம்

0

லக்சபான நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் 9 வான் கதவுகளும் ஏற்கனவே திறந்து விடபட்டுள்ளன.

அடுத்து மவுசாகலை நீர்த்தேக்க வான் கதவுகள் திறக்கப்படும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், களனி கங்கையை மிக அண்மித்து வாழும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு கோரப்பட்டுள்ளது. 

லக்சபான, காசல்ரீ இரண்டும் மட்டுமே களனி கங்கையை சூழவுள்ள தற்போதைய வெள்ள நிலமையை மோசமடையச் செய்ய போதுமானவை.

இதில் மவுசாகலை நீரும் சேர்ந்து வந்தால், நிலமையை மிக மோசமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே, களனி கங்கையை மிக அண்மித்து வாழும் மக்கள், பாதுகாப்பை பொருட்படுத்தி அவசரமாக வெளிறுவது ஆபத்துக்களை குறைக்கும். 

முக்கியமாக, கொழும்பில் களனி கங்கையை அண்மித்த பகுதிகளில் வாழ்பவர்கள் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மக்கள் வெளியேறாவிட்டால் நிலமை மோசமடையும் போது மீட்புக் குழுக்களாலும் அவர்கள் இருக்கும் இடத்தை அணுக முடியாமல் போகலாம் எனவே,  தயவுசெய்து வெளியேறிச் செல்லுங்கள் என கோரப்படுகின்றது. 

அதேவேளை, காசல்ரீ அணையின் 9 வான் கதவுகளும் திறக்கப்படுவது சுமார் 7 வருடங்களின் பின்னர் என்பது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version