ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் லக்ஷ்மன் கிரியல்ல பிரதமராக வருவார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
மலையகத்திலிருந்து ஒரு பிரதமர்
“ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், மலையகத்திலிருந்து ஒரு பிரதமர் நியமிக்கப்பட்டது போன்று சஜித் பிரேமதாசவும் செயற்படுவார்.
சஜித் பிரேமதாசவுக்கான பெரும்பாலான பணிகளை சபைத் தலைவர் என்ற வகையில் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் செய்து வருகின்றார்” என்றார்.