Home இலங்கை அரசியல் ரணிலுடன் மோதல்: சஜித் அணிக்கு தாவிய ஐ.தே.க முன்னாள் எம்.பி

ரணிலுடன் மோதல்: சஜித் அணிக்கு தாவிய ஐ.தே.க முன்னாள் எம்.பி

0

களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் விஜேமான்ன (Lakshman Wijemanne), ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.

அண்மையில் ஐக்கிய புதிய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வொன்று இடம்பெற்றிருந்த போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் விஜேமான்னவிற்கும் இடையில் முரண்பாடொன்று ஏற்பட்டிருந்ததது.

மோதல்

அதன்போது, ரணில் விக்ரமசிங்கவிடம் நியமனக் கடிதத்தை பெற வந்த லக்ஷ்மன் விஜேமான்ன, தான் ஐக்கிய தேசியக் கட்சிக்காக பாரிய தியாகங்களை செய்துள்ளதாகவும் ஆனால் ராஜித சேனாரத்ன வருகையின் பிறகு ரணில் தனியாக வேலை செய்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

எனினும், விஜேமான்ன கூறிய எதனையும் காதிலேயே வாங்காமல் ரணில் புறக்கணித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், லக்ஷ்மன் விஜேமான்ன ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version