Home இலங்கை அரசியல் டட்லி சிரிசேனவிடம் மண்டியிட்ட அமைச்சர் லால்காந்த

டட்லி சிரிசேனவிடம் மண்டியிட்ட அமைச்சர் லால்காந்த

0

கமத் தொழில் அமைச்சர் லால்காந்த, பிரபல கோடீஸ்வர வர்த்தகர் டட்லி சிரிசேன தொடர்பான தனது கடுமையான நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளார்.

இலங்கையின் முக்கிய குளங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் அனைத்துக் கட்டிடங்களையும் அகற்ற நீர்ப்பாசனத் திணைக்களம் அண்மையில் தீர்மானித்திருந்தது.

முன்வைக்கப்படும் விமர்சனம்

இதன்போது பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரம் குளத்தின் கரையோரத்தை ஆக்கிரமித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள ட்டலி சிரிசேனவின் சுது அரலிய ஹோட்டலும் அகற்றப்படுமா என்று அண்மையில் செய்தியாளர்கள் அமைச்சர் லால்காந்தவிடம் வினாத் தொடுத்திருந்தனர்.

அதற்குப் பதிலளித்த அவர், டட்லி மட்டுமல்ல எந்தக் கொம்பனாக இருந்தாலும் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் நிச்சயமாக அகற்றப்படும் என்று உறுதிபடத் தெரிவித்திருந்தார்.

எனினும் மேற்குறித்த கூற்றை தற்போதைக்கு மீள பெற்றுள்ள அமைச்சர் லால்காந்த, டட்லி சிரிசேன குளத்தை ஆக்கிரமிக்கவில்லை என்றும் அவரது ஹோட்டலை இடிக்க முடியாது என்றும் தற்போது தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதிலாக ட்டலியின் ஹோட்டல் எல்லை வேலி மட்டுமே அகற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தனது முன்னைய கடுமையான நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு நழுவிச் செல்ல முற்படும் லால்காந்த, வர்த்தகர் டட்லியிடம் சரணாகதி அடைந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version