Home இலங்கை சமூகம் அம்பாறையில் உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதி வழங்கும் நிகழ்வு

அம்பாறையில் உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதி வழங்கும் நிகழ்வு

0

அம்பாறை மாவட்டத்தில் மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்குடன் தேசிய ரீதியில்
முன்னெடுக்கப்படும் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் ”உறுமய”
தேசிய வேலைத் திட்டத்தின் கீழ்  காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wicktemsinghe) தலைமையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது நேற்று (25) அம்பாறை (Ampara) வீரசிங்க விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர்
செந்தில் தொண்டமான் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாவட்ட அரசாங்க
அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பொருளாதார நெருக்கடி

உறுமய
திட்டத்தினால் மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தி, சொத்துப் பெறுமதியையும்
உயர்த்த முடிந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கோவிட்
தொற்று – பொருளாதார நெருக்கடியினால் சரிவடைந்த சொத்துக்களின் பெறுமதி “உறுமய”
திட்டத்தின் ஊடாக வலுவடைந்திருப்பதால், அதனூடாக நாட்டின் பொருளாதாரத்தைப்
பலப்படுத்த முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், நாட்டு மக்களுக்கு காணி உறுதிகளை வழங்க அரசாங்கம்
முன்னெடுத்திருக்கும் வேலைத்திட்டம் புரட்சிகரமானதோடு இதுவரையில்
உலகின் எந்தவொரு நாட்டிலும் இவ்வாறானதொரு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

20 இலட்சம் பேர் இப்படியாக காணி உறுதி உரிமை இல்லாமல் இருக்கிறார்கள். அதனை
மாற்றியமைக்க வேண்டுமென தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

காணி உரிமை

காணியின் பெறுமதி
எமக்கான அந்தஸ்தாகவும் மாறும்.இந்நாட்டில் பெருமளவானர்களுக்கு அவர்கள்
பரம்பரையாக வசித்த காணிக்கு சட்டபூர்வமான அனுமதி கிடைக்கவில்லை. உறுமய
திட்டத்தின் கீழ் அந்த காணிகளுக்கான உறுதிகள் வழங்கப்படும்.

அதன் பின்னர்
நீங்கள் எவருக்கும் அடிபணிய வேண்டியதில்லை. உங்களுக்கு கிடைக்கும் நிரந்தர
காணி உரிமையை இரத்துச் செய்யவும் அதிகாரம் இல்லை

மேலும்,  இன்னும் இரண்டு
மூன்று வருடங்களுக்கு இந்த வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல
வேண்டும்.என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/land-assurance-event-under-urumaya-project-amparai-1719367848

NO COMMENTS

Exit mobile version