வடக்கு, கிழக்கு மக்களின் காணி பிரச்சினை தொடர்பாக தென்னிலங்கை ஊடகங்களிடம் வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தால் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (20) கொழும்பு- பொரளை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
முக்கியமாக யாழ்.காங்கேசன்துறை தையிட்டியில் அமைந்துள்ள மக்களின் காணிகளை
வலுக்கட்டாயமாக அபகரித்து பெளத்த மதம் என்ற போர்வையில் அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டதென்பதனை ஆதாரபூர்வமாக சகல
ஆவணங்களுடனும்,காணிக்கான நிரந்தர உரிமை பத்திரத்துடன் வருகை தந்த காணி
உரிமையாளர்களால் மிக தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது.
காணியின் உண்மை நிலை
1921ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த காணிக்கான ஆவணங்களை தம்வசம் மக்கள்
வைத்திருப்பதுடன்,16 பேருக்கு சொந்தமான குறித்த காணியின் உண்மை நிலையை
தென்னிலங்கை மக்களுக்கும்,ஊடகங்களுக்கும் உறுதியாக வழங்கப்பட்டது.
மேலும், காணி அமைச்சரை சந்தித்து மேலும் கலந்துரையாடுவதற்காக வடமாகாண காணிக்கான மக்கள்
உரிமை இயக்கம் பத்தரமுல்லை செல்லவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
