Home இலங்கை அரசியல் சாணக்கியனின் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது: எதிர்க்கும் பிள்ளையான் தரப்பு

சாணக்கியனின் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது: எதிர்க்கும் பிள்ளையான் தரப்பு

0

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன், தமிழ் மக்கள் விடுதலைப் புலி கட்சி 10 ஏக்கருக்கு
மேற்பட்ட காணியை பிடித்து வைத்துள்ளது என்று கூறும் கருத்து உண்மைக்கு புறம்பானது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது சட்டத்துக்கு முரணானது
என்றும் கருத்துக்களை வெளியிட்டு மக்களையும், அதிகாரிகளையும் திசை திருப்பி
குழப்புகின்ற செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தார் எனவும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மகாண சபை உறுப்பினருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் கூறியுள்ளார்.

உரிய காணிக்கான திட்ட முன்மொழிவுகள் கொடுக்கப்பட்டு அரசியல் கலாசார தலைமைத்துவ
மத்திய நிலையத்திற்கான காணி மட்டக்களப்பு மட்டக்களப்பு திராய்மடுவில்
பெறப்பட்டு இருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

 நீண்ட கால குத்தகை

இதன்போது அவர்
மேலும் தெரிவிக்கையில், “75 வருடங்களாக செயல்படுகின்ற ஒரு இலங்கைத் தமிழரசுக் கட்சி மக்கள் மத்தியில்
அரசியல் ரீதியான கருத்துக்களையும், தெளிவூட்டல்களையும், மேற்கொள்வதற்கு
மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 ஏக்கர் அல்ல 20 ஏக்கர் காணியினை நீண்ட கால
குத்தகைக்குப் பெற்று மிகப் பிரமாண்டமான அலுவலகத்தை கட்டி மக்களுக்கு அரசியல்
தொழில் செய்யுங்கள்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மக்களை தெளிவூட்டுவதற்காக சட்டப்படியாக
மூன்று ஏக்கர் காணியைப் இவ்வாறு அரசியல் கலாசார தலைமைத்துவ நிலையத்தை
அமைப்பதற்காக முன்வந்தால் அதனை மாற்றி 10 ஏக்கர் காணியினை சூறையாடி
இருக்கின்றார்கள் காணியைக் கொள்ளை அட்டிருக்கின்றார்கள் என மிகப் பொய்யான
வதந்திகளை கூறி அதிகாரிகளையும் மக்களையும் திசை திருப்ப வேண்டாம்.

மக்களுக்காக ஏதாவது நல்ல விடயங்களை செய்யுங்கள். தமிழ் மக்கள் விடுதலைப்
புலிகள் கட்சி அரசியல் கலாசார தலைமைத்துவ மத்திய நிலையம் அமைத்த பிற்பாடு
எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கின்ற உறுப்பினர்களளும் வந்து அங்கு
இருக்கின்ற நூலகத்தை பயன்படுத்தலாம்.

அங்கு இருக்கின்ற மண்டபத்தை
பயன்படுத்தலாம், முடிந்தால் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் வந்து செல்லலாம்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version