Home இலங்கை அரசியல் முன்னாள் தமிழ் எம்.பிக்கள் சட்டவிரோதமாக கைப்பற்றிய காணிகள்: அம்பலப்படுத்திய அரசாங்கம்

முன்னாள் தமிழ் எம்.பிக்கள் சட்டவிரோதமாக கைப்பற்றிய காணிகள்: அம்பலப்படுத்திய அரசாங்கம்

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் (Vadivel Suresh) மற்றும் லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே ஆகியோரின் மீது காணி மோசடி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர (Manjula Suraweera Arachchi) முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நுவரெலியா மாட்டத்தில் இந்த நாட்டுக்காக வியர்வை சிந்தி உழைக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கு காணிகள் இல்லாத நிலையில் முன்னாள் அரசியல்வாதிகள் மோசடியாக காணிகளை கைப்பற்றியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலே பொடோப் தோட்டத்தில் முன்னாள் உறுப்பினர் சதாசிவம் 15 ஏக்கர் காணியையும் மற்றும் தலவாக்கலையில் முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய 50 ஏக்கரும் கைப்பற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா மாகொஸ்தொட்ட தோட்டத்தில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பத்து ஏக்கரும், மாகொஸ்தொட்ட அசோக்காராம விஹாரைக்கு பின் பக்கம் பத்து ஏக்கர் மற்றும் லவ்வர்ஸ் சீலிப் நீர் வீழ்ச்சிக்கு பக்கத்திலும் பத்து ஏக்கர் காணியை முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கைப்பற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version