Courtesy: Sivaa Mayuri
பதுளை (Badulla)- கரந்தகொல்ல பிரதேசத்தில் நிலவும் மண்சரிவு அபாயம் குறித்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனினால் (Pramitha Bandara Tennakoon) விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி பதுளை – கரந்தகொல்ல பிரதேசத்தில் எல்ல – வெல்லவாய வீதிக்கு அருகில் பாரிய மண்சரிவு ஏற்பட்டது.
இதன்போது, உமா ஓயா திட்டமே இந்த நிலைமைக்குக் காரணம் என உள்ளூர்வாசிகள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இந்நிலையில், மண்சரிவு ஏற்பட்ட இடம் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்தை மீண்டும் ஆய்வு செய்து விரிவான அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட அதிரடி வைரஸ் தாக்குதல்
ஆய்வறிக்கை
மேலும், எதிர்காலத்தில் இந்த பகுதியில் ஏற்படும் மண்சரிவு அபாயங்களை தடுப்பதற்கான தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இடர் முகாமைத்துவ நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அது மாத்திரமன்றி, இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் விஞ்ஞானிகள் அடங்கிய நிபுணர் குழு இந்த நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் மே மாதம் 01ஆம் திகதி சம்பவ இடத்தில் கள ஆய்வு செய்து தேவையான பரிந்துரைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டன.
அதேவேளை, மண்சரிவு அபாயத்தைக் குறைப்பதற்கு குறுகிய கால முறைகள் மூலம் மலையகப் பகுதிகளில் நீர் மட்டத்தைக் குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதுளை மாவட்டச் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், குறித்த பகுதியில் மண்சரிவு அபாயத்தை ஏற்படுத்தும் நீர்வழிப்பாதைகளை குறுகிய காலத்தில் திருப்பிவிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஜித் -அனுர விவாதத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை: சட்டத்தரணிகள் சங்கம் திட்டவட்டம்
வீர வசனங்களை பேசாமல் தீர்வுகளை வழங்குங்கள்: பிள்ளையான் – சாணக்கியன் இடையே வாக்குவாதம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |