Home இலங்கை சமூகம் ஏழு மாவட்டங்களுக்கு நீட்டிக்கபட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

ஏழு மாவட்டங்களுக்கு நீட்டிக்கபட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

0

ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்னும் நடைமுறையில் இருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு, காலி, கேகாலை, நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நடைமுறையில் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

அனர்த்த நிவாரண குழு

இதேவேளை களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு சிவப்பு அறிவித்தல் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் புளத்சிங்கள மற்றும் இங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் கலவான, அஹெலியகொட மற்றும் அலபாத்த பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, பரகொட மற்றும் புளத்சிங்கள பிரதேசத்தில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வெள்ள அனர்த்த நிவாரண குழுவொன்று களமிறக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.   

NO COMMENTS

Exit mobile version