Courtesy: Sivaa Mayuri
லங்கா ஜனதா கட்சியை செயலிழக்கச் செய்யும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை இடைநிறுத்திய உயர் நீதிமன்றம், பொதுத் தேர்தலில் போட்டியிட அந்த கட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
உள்நாட்டுப் பூசல் காரணமாக லங்கா ஜனதா கட்சி செயலிழந்து பொதுத் தேர்தலில் போட்டியிட தேர்தல்கள் ஆணைக்குழுவால் அனுமதிக்கப்படவில்லை.
நீதி பேராணை
இந்தநிலையில், அக்கட்சியின் பொது செயலாளர் சாலிக்க பெரேரா இந்த தீர்மானத்தை எதிர்த்து நீதிப்பேராணை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றை செயற்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை என அவர் வாதத்தை முன்வைத்திருந்தார்.
இதற்கமைய, குறித்த மனுவை விசாரணை செய்த பதில் பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ, நீதியரசர்களான ஏ.எம்.டி நவாஸ் மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை இடைநிறுத்தி உத்தரவை பிறப்பித்துள்ளது.