Courtesy: Sivaa Mayuri
வர்த்தக அமைச்சரினால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் அரிசி மற்றும் தேங்காய் விற்பனையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை லங்கா சதொச அறிவித்துள்ளது.
அரிசி ஆலைகள் நாளாந்தம் 200,000 கிலோ அரிசியை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
இதன்படி, ஒரு கிலோ அரிசியை 220 ரூபாய்க்கும், தேங்காய் ஒன்று 130 ரூபாய்களுக்கும் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
வாடிக்கையாளருக்கான அறிவிப்பு
இதன் அடிப்படையில், அரிசி மற்றும் தேங்காய்களை சதொச விற்பனை நிலையங்களுக்கு இன்று விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச தலைவர் சமித்த பெரேரா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஒரு வாடிக்கையாளருக்கு 03 தேங்காய் மற்றும் 05 கிலோ அரிசியை மாத்திரமே கொள்வனவு செய்ய அனுமதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று மாலை முதல் கொழும்பில் உள்ள சதொச விற்பனை நிலையங்களிலும், நாளை 6 ஆம் திகதி முதல் புறநகர் பகுதிகளிலும் அரிசி மற்றும் தேங்காய்களை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என சமித்த பெரேரா தெரிவித்துள்ளார்.