Home இலங்கை சமூகம் ஈரானில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

ஈரானில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

0

ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமாகியுள்ள நிலையில், ஈரானில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

தெஹ்ரானில் இயங்கி வந்த இலங்கைத் தூதரகம் ஈரானின் வடக்குப் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், தூதரக அதிகாரிகளும் பாதுகாப்பிற்காக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இருப்பினும் அனைத்து தொலைபேசி எண்கள் வழமை போன்று செயல்பட்டு வருகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தூதரகத்தில் தங்கியிருந்த 8 இலங்கை மாணவர்களும் பாதுகாப்பு காரணங்களால் ஈரானின் வடக்குப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

தூதரகத்துக்கு அருகில் தாக்குதல்கள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹேரத் தெரிவித்துள்ளார்.

தற்போது ஈரானில் சுமார் 35 இலங்கையர்கள் உள்ளனர் எனவும் அவர்களில் தெஹ்ரானில் வசிப்பவர்கள் அதிக ஆபத்துக்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இஸ்ரேலில் சுமார் 20,000 இலங்கையர்கள் தற்காலிகமாக வசித்து வருகிறார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமாக, இஸ்ரேலுக்கு வேலைக்காக இலங்கையர்களை அனுப்பும் செயல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version