Home உலகம் அதிகரிக்கும் பதற்றம் : ஈரான் அரச வங்கி மீது சைபர் தாக்குதல்

அதிகரிக்கும் பதற்றம் : ஈரான் அரச வங்கி மீது சைபர் தாக்குதல்

0

இஸ்ரேல் (Israel) – ஈரான் (Iran) இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில் ஈரானின் அரச வங்கிகளில் ஒன்றான செபா வங்கி மீது சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செபா வங்கியின் உள்கட்டமைப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதலினால் அவ்வங்கியின் இணைய சேவைகளில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

முன்னதாக, இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் அமைப்பின் தலைமையகத்தைத் ஈரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகளில் ஒன்று தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகி சில மணிநேரங்களில், இந்த சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மேலும் வங்கி சேவையை மீட்டெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version