Home இலங்கை குற்றம் வர்த்தகர்களை குறிவைத்து பெருந்தொகை பணமோசடி: உடனடியாக அறிவிக்குமாறு அறிவுறுத்தல்

வர்த்தகர்களை குறிவைத்து பெருந்தொகை பணமோசடி: உடனடியாக அறிவிக்குமாறு அறிவுறுத்தல்

0

பொது பரிசோதகர்கள் போன்று அடையாளப்படுத்தி வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு சிலர் பண மோசடியில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிற அரச அதிகாரிகள் போல் நடித்து வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி பணம் மோசடி செய்த பல வழக்குகள் பதிவாகியுள்ளன.

மோசடி சம்பவங்கள் குறித்து முறைப்பாடு

கடந்த காலங்களிலும் இதுபோன்று பல்வேறு வர்த்தகர்கள் மற்றும் தனிநபர்கள் பணம் மோசடி செய்த சம்பவங்கள் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸார் தலையிட்டு இதுபோன்ற மோசடி செய்த பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் மீண்டும் இந்த மோசடி பல இடங்களில் இடம்பெறுவதாக தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து சட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பொதுச்சுகாதார பரிசோதகர் என்று கூறிக்கொண்டு பதவி வேறுபாடின்றி பணம் கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களை வேண்டிக்கொள்கின்றோம்.

சட்ட நடவடிக்கை

இந்த மோசடியை ஒரே குழுவினர் செய்துள்ளதாக சந்தேகிக்கின்றோம். எனவே எக்காரணம் கொண்டும் எந்த ஒரு அரச அதிகாரிக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என மக்களை கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வாறான அழைப்புக்கள் வந்தால், உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும், பொது சுகாதார பரிசோதகராக காட்டிக்கொண்டு யாராவது பணம் கேட்டால் அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைபடுத்துவதில் பொதுமக்களுடன் இணைந்து நிற்போம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version