பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி, விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பியில் 2ம் இடத்தில் இருந்துவரும் ஒரு தொடர்.
இப்போது கதையில் ராமமூர்த்தியை உயிரிழந்த காட்சிகள் இடம்பெற்று வருகிறது. இன்றைய எபிசோடில் குடும்பத்திற்கு அவர் இறந்த சம்பவம் காட்டப்பட கோபிக்கும் தெரிய வருகிறது.
கோபி முதலில் தனது அப்பா இறப்பை நம்பவில்லை, பின் அப்பாவை கண்டு அழுது புலம்புகிறார். அடுத்து எழிலுக்கு எப்படி இந்த விஷயம் எப்படி சொல்வார்கள் என்பது தெரியவில்லை.
சோகமான புரொமோ
கதையில் ராமமூர்த்தி எப்போதும் சொன்னதை ஈஸ்வரி நிறைவேற்றியுள்ளார். அதாவது தனது கணவரின் இறுதிச்சடங்கு அனைத்தும் பாக்கியா நீ தான் செய்ய வேண்டும், உன் மாமாவின் ஆத்மா சாந்தியடைய நீ தான் செய்யனும் என்கிறார்.
இதனால் பாக்கியா தனது மாமாவிற்காக அனைத்து காரியங்களையும் செய்கிறார்.