வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் இலங்கைக்கு 5,116 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 19.3 சதவீதம் அதிகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட தொகை 4,288 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
ஆகஸ்ட் மாதம் பதிவான விபரம்
இதேபோல், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இலங்கைக்கு 680 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளனர்,
அதே நேரத்தில் 2024 ஆகஸ்டில் அந்த தொகை 577.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.
