Home இலங்கை சமூகம் யாழில் சி.ஐ.டியினரால் சுற்றிவளைக்கப்பட்ட நபர்: வெளியான பின்னணி

யாழில் சி.ஐ.டியினரால் சுற்றிவளைக்கப்பட்ட நபர்: வெளியான பின்னணி

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) பெருமளவான நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருகையில், 20 இலட்சத்து 32ஆயிரம் ரூபா பெறுமதியான தளபாடங்களை தருவதாகக் கூறிய சந்தேகநபர், வவுனியாவில் உள்ள நபர் ஒருவரை ஏமாற்றி பணத்தினை பெற்றுக் கொண்டுவிட்டு ஒரு மாதகாலமாக தலைமறைவாக இருந்துள்ளார்.

மேலதிக விசாரணை

இந்நிலையில், யாழ்.மாவட்டம் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜெய மஹா தலைமையின் கீழ் இயங்கும் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கோண்டாவில் பகுதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version