Home உலகம் அதிக எடையில் பிறந்த ஆண் குழந்தை

அதிக எடையில் பிறந்த ஆண் குழந்தை

0

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 5.2 கிலோகிராம் எடையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வழக்கமாக ஆண் குழந்தை எனில், அதிகபட்சம் 3.2 கிலோகிராம் எடை என்ற அளவில் தான் பிறக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் முதல் முறையாக, 5.2 கிலோகிராம் எடையில் ஆரோக்கியமாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பு

கர்ப்பகாலத்தில் அந்த பெண், எடுத்துக் கொண்ட உணவு முறைகளே குழந்தையின் எடை அதிகமாக இருக்கக் காரணம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

சிசேரியன் சிகிச்சை தங்களுக்கு சவாலாக இருந்ததாகவும் குழந்தையும், தாயும் நலமாக உள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

எங்கள் வீட்டுக்கு விநாயகரே பிறந்துள்ளார் என்று குழந்தையின் தாயும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிக எடையில் குழந்தை பிறந்துள்ளதால் இருவரையும் மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version