Home முக்கியச் செய்திகள் மிதிகம லசா கொலையின் துப்பாக்கிதாரி கைது!

மிதிகம லசா கொலையின் துப்பாக்கிதாரி கைது!

0

புதிய இணைப்பு

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர எனப்படும் “மிதிகம லசாவை” கொலையின் பிரதான துப்பாக்கித்தாரி சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படும் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகம காவல்துறையினரால் காலியில் வைத்து சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பில் தற்போது வரையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நான்கு பேர் கைது 

இந்த சம்பவம் தொடர்பாக கெகிராவ பகுதியில் இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மூன்று பேரை கைது செய்திருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நான்கு பேரினுள் பெண்ணொருவரும் உள்ளடங்குகின்றார்.

சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025

NO COMMENTS

Exit mobile version