முரளி
பூவிலங்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த நாயகன் முரளி. இதன்பின் இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்களில் சூப்பர்ஹிட்டாகியுள்ளது.
அதிலும் குறிப்பாக இதயம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை முரளிக்கு தேடி தந்தது. இதனால் தான் இன்றும் நடிகர் முரளியை இதயம் முரளி என ரசிகர்கள் அழைக்கிறார்கள்.
3400 கோடி ரூபாய் சொத்தை தானமாக வழங்கிய நடிகர் ஜாக்கி சான்.. இந்த மனசு யாருக்கு வரும்
கடந்த 2010ஆம் ஆண்டு நடிகர் முரளி காலமானார். இவருக்கு மூன்று பிள்ளைகள். மூத்த மகள் காவ்யா, இரண்டாவது மகன் அதர்வா மற்றும் மூன்றுவது மகன் ஆகாஷ்.
இதில் அதர்வா பிரபலமான நடிகர் ஆவார். ஆகாஷ் கடந்த ஆண்டு வெளிவந்த நேசிப்பாயா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
முரளியின் வீடு
இந்த நிலையில், மறைந்த நடிகர் முரளியின் பிரம்மாண்ட வீட்டின் வீடியோ வெளியாகியுள்ளது. பிரபல சின்னத்திரை நடிகர் முரளி ராதாகிருஷ்ணன் சமீபத்தில் நடிகர் முரளியின் வீட்டிற்கு சென்று, அவருடைய நினைவு படத்திற்கு மாலை போட்டு மரியாதை செய்துள்ளார்.
அப்போது அங்கு எடுக்கப்பட்ட வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..
