ஏப்ரல் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய விலை
அந்தவகையில், 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவால் அதிகரித்து புதிய விலை ரூ.4,100 ஆக விற்பனை செய்யப்படும்.
அத்தோடு, 5 கிலோ சிலிண்டர் ரூ.168 அதிகரித்து ரூ.1,645 ஆக விற்பனை செய்யப்படும் என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த மாதத்திற்கான லாஃப் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
