Home இலங்கை சமூகம் மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம் : லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம் : லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு

0

சந்தையில் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களில் நீங்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வாகபிட்டிய (W.K.H Vagapitiya) குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள இராணுவ நிலைமை காரணமாக லாஃப்ஸ் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு கையிருப்பு நாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிவாயு இருப்புக்கள்

அத்தோடு லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பிரதான முனையம் வெள்ளத்தில் மூழ்கி இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், லாஃப்ஸ் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு சரக்குகளை ஏற்றிச் சென்ற கப்பல் நேற்று (28) ஹம்பாந்தோட்டை (Hambantota) துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நாடளாவிய ரீதியில் எரிவாயு இருப்புக்கள் விநியோகிக்கப்படும் என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/laugfs-gas-shortage-in-sri-lanka-1730168655

NO COMMENTS

Exit mobile version