Courtesy: Sivaa Mayuri
பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்தின் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களுக்கான தூதரக விவகாரப் பிரிவின் இணைய அங்கீகரிப்பு தளத்தை, இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இன்று(02) ஆரம்பித்துள்ளது.
முன்னதாக பரீட்சைத் திணைக்களத்தின் சான்றிதழ் ஆவணங்களே இணையம் மூலம் அங்கீகரிக்கப்பட்டன.
புதிய தளம்
இந்தநிலையில் புதிய தளத்தின்படி,தற்போது 50-55வீத ஆவணங்களுக்கான இணைய அங்கீகரிப்பு சான்றிதழை பெற்றுக்கொள்ளமுடியும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி(Ali Sabry) தெரிவித்துள்ளார்.