Home முக்கியச் செய்திகள் மனைவியை கொலைசெய்த கணவனுக்கு விதிக்கப்பட்டது மரணதண்டனை

மனைவியை கொலைசெய்த கணவனுக்கு விதிக்கப்பட்டது மரணதண்டனை

0

 மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்ட கணவனுக்கு ஊவா(uva) மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்விஸ்(Prasanna Alwis) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி கெந்தெகொல்ல கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து திஸாநாயக்க முதியன்சேலாகே சந்திரவதி (35)(Dissanayake Mudiyanselage Chandrawathi )என்ற தனது மனைவியை அவர் தாக்கி கொலை செய்தமை நிரூபணமாகியுள்ளது.

மனைவிக்கு இருந்த தவறான உறவு

வேறொரு நபருடன் மனைவிக்கு ஏற்பட்ட இரகசிய உறவால் எழுந்த குடும்ப தகராறு கொலைக்கு வழிவகுத்தது என்று அரசுத் தரப்பால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட சுலைமான் தர்மதாச(Sulaiman Dharmadasa), மனைவியை கட்டையால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாகவும், பதுளை பொது வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

உள் இரத்தக் கசிவினால் ஏற்பட்ட காயம் காரணமாக பாதிக்கப்பட்டவர் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி என்.எம்.ருஹுல் ஹக் தெரிவித்தார்.

தண்டனையை வழங்கிய நீதிபதி, தண்டனையைப் பெறுவதற்கு எதிரான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு நிறுவியதாகக் கூறினார்.

NO COMMENTS

Exit mobile version