Home இலங்கை அரசியல் கடற்றொழிலாளர் சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட சட்டம்: எழுந்துள்ள கண்டனம்

கடற்றொழிலாளர் சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட சட்டம்: எழுந்துள்ள கண்டனம்

0

தற்போதைய கடற்றொழில் அமைச்சரால் கொண்டுவரப்பட இருப்பதாக தெரிவிக்கப்படும் சட்டம் கடற்றொழிலாளர் சமூகத்தால் எப்போதோ நிராகரிக்கப்பட்டது என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் நேற்றையதினம்(17.03.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  

அவர் மேலும் கூறுகையில்,

“தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள 16 கடற்றொழில் தொழில்களையும் உடனடியாக தடை
செய்ய வேண்டும். அத்துடன், எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் மக்களிற்க்கே
வாக்களிக்க வேண்டும்.

அரசாங்கத்தை நிராகரிக்க வேண்டும்

ஏனெனில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ்
மக்களுக்கு உறுதியளித்தது போன்று எதனையும் செய்யவில்லை.

இதனாலேயே தேசிய
மக்கள் சக்தி அரசாங்கத்தை மக்கள் நிராகரிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version